அ.தி.மு.க. ஆக்சிஜனால் தான் பா.ஜ.க. செயல்படுகிறது - திருநாவுக்கரசு எம்.பி. பேட்டி

அ.தி.மு.க. ஆக்சிஜனால் தான் பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை அண்ணாமலை ஒப்புக்கொள்ள வேண்டும் என திருநாவுக்கரசு எம்.பி. கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஆக்சிஜனால் தான் பா.ஜ.க. செயல்படுகிறது - திருநாவுக்கரசு எம்.பி. பேட்டி
Published on

திருச்சி:

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். தவறு செய்தால் கட்டாயமாக பலன் அனுபவிக்க வேண்டும்.

மேலும் மத்திய அரசும் மாநில அரசும் பழிவாங்கும் எண்ணத்தை வைத்துக்கொண்டு வருமானவரித் துறையினரை அனுப்பக் கூடாது. தவறு செய்தால் கட்டாயமாக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்படும்.

திமுகவின் ஆக்சிஜனால் தான் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதாவது அ.தி.மு.க. ஆக்சிஜனால் தான் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என்பதை முதலில் அவர் ஒப்புக்கொண்ட பிறகு மற்றவர்களை விமர்சனம் செய்யலாம்.

தமிழ்நாட்டை தனித் தமிழ் நாடாக பிரிப்பது சாத்தியமில்லை. அது இந்தியாவின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும். இளையராஜாவிற்கு எம்.பி. பதவி கொடுத்தது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தொடர்ந்து மக்கள் பாதிப்பு அடைந்து வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், ராஜா டேனியல் ராய் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com