திருப்பரங்குன்றம் வழக்கு - அரசின் நிலை என்ன? மதுரை ஐகோர்ட் கேள்வி

உயா் அதிகாாிகளிடம் ஆலோசிக்க வேண்டுமென அரசு தரப்பு கூறியதையடுத்து, விசாரணை ஜூன் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஐகோர்ட்
Published on

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு என்ன?என்று ஐகோர்ட் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. தீபம் விவகாரத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்த நிலையில் நீதிபதிகள் இந்த கேள்வியை முன்வைத்தனர்.

அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும், தீபம் ஏற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கலாமே? என்று கூறிய நீதிபதிகள், இது ஜனநாயக நாடு, மக்கள் உணா்வுக்கு மதிப்பளிக்கவேண்டும், நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்? என்றும் கேட்டனர். உயா் அதிகாாிகளிடம் ஆலோசிக்க வேண்டுமென அரசு தரப்பு கூறியதையடுத்து, விசாரணை ஜூன் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com