திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; முதல்-அமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ்

தமிழக அரசிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்
விஜய்
Published on: 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி சார்பில், முதல்-அமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சருக்கு நோட்டீஸ்

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவ தற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஜி.பானுபிரகாஷ் ரெட்டி சார்பில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு, வக்கீல் கே.அஜய்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில் திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு களை தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமல்படுத்த தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

48 மணி நேரத்திற்குள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதால் மட்டுமே அந்த உத்தரவு தானாகவே நிறுத்தி வைக்கப்படாது. சம்பந்தப் பட்ட கோர்ட்டு உத்தரவை நிறுத்தி வைக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ செய்யும் வரை, அதிகாரிகள் அதனை அமல்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும்.நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனை செயல்படுத்த தவறியதற் கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.தமிழக அரசிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

X