திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய்யுடன் தலைமை வழக்கறிஞர் முக்கிய ஆலோசனை

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.விஜய் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
விஜய்
Published on: 

சென்னை,

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20-ந்தேதி இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு, கார்த்திகை தீபத்திருநாளான 24-ந்தேதி மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. இதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

சீராய்வு மனு

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.விஜய் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைக்கு எதிரானது என்றும், இதனால் தமிழகத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் கோரப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் விஜய்

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, அதன் விசாரணை மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

X