திருப்பரங்குன்றம் விவகாரம்: "முதல்-அமைச்சர் விஜய்யை தவறாக வழிநடத்தியுள்ளனர்" - அண்ணாமலை

காங்கிரசை எதிர்ப்பதற்காக தி.மு.க. மறுசீரமைப்புக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்: "முதல்-அமைச்சர் விஜய்யை தவறாக வழிநடத்தியுள்ளனர்" - அண்ணாமலை
Published on: 

கோவை,

திருப்பரங்குன்றம் விவகாரத்தை தமிழ்நாடு அரசு சரியாக கையாளவில்லை என்று ‘வீ தி லீடர்ஸ்' தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தவறாக வழிநடத்தியுள்ளனர்

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை. பதற்றத்தில் திருப்பரங்குன்றம் தீபம் நிகழ்வு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜயை தவறாக வழிநடத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விஜய் பேச வேண்டும். அரசியல் தலைவர்களின் கருத்து திருப்பரங்குன்றம் அமைதியை சீர்குலைக்க கூடாது.

கூட்டணி வரைபடம் மாறும்

தொகுதி மறுவரையறை மசோதாவை த.வெ.க. ஆதரிக்க வேண்டும்; அரசியல்படுத்தக் கூடாது; மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு தொகுதி மறுவரையறை மசோதா வருவது நல்லது. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தந்தது இந்திய அளவில் கூட்டணி வரைபடத்தை மாற்றப் போகிறது.

காங்கிரசை எதிர்ப்பதற்காக திமுக மறுசீரமைப்புக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது. மறுசீரமைப்பை திமுக வெளிப்படையாக சொல்லியுள்ளது. திமுகவின் அந்த கருத்து ஏப்ரல் மாதமே கூறியது; இப்போது கூறவில்லை. அவர்கள் பின்னோக்கி சொல்லவில்லை.

நியாயப்படி இது நடந்திருக்கக்கூடாது

திருப்பரங்குன்றம் விவகாரத்தை தேவையில்லாமல் தவெக தலையில் எடுத்துப் போட்டுள்ளது. வேறுவழியில்லாமல் நீதிமன்றம் இதைச் செய்துள்ளது. நியாயப்படி இது நடந்திருக்கக்கூடாது; இது நடக்கக் காரணம், தமிழக அரசு. மதுரை கலெக்டர் கையில் சட்டியைக் கொடுத்து, மூன்றாவது வரிசையில் தீபமேற்ற நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

போலீசிற்கு அல்வா

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவை ஒரு தரப்பு கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை. தேவையில்லாமல் அமைப்புகள் கொண்டாடுவது, தமிழ்நாடு போலீசிற்கு அல்வா கொடுக்கும் செயல்பாடுகள் தேவையற்றது; இது கலவரத்திற்கு கொண்டு செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X