திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி..!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி..!
Published on: 

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அமைதி நிலை மீது தாக்குல்

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

மதுரை மாநகர் அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய மரபுப்படியும், நீண்ட கால வழக்கப்படியாகவும் மூன்று நாள் முன்பு 24.11.2026 ஆம் தேதி தீபத்திருநாளில், மலை மீது இருக்கும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தீபத்தூண் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் ஆன்மீக விதிகளை பின்பற்றி செய்திருந்தது. தமிழ்நாடு அரசும் போதுமான பாதுகாப்பு வசதிகளையும், உதவிகளையும் செய்து கொடுத்தது. மதுரை மாநகர் மக்கள் மட்டும் அல்லாமல், கார்த்திகை தீபம் காண திரண்டு வந்த பக்கதர்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடுகளின்றி தீப தரிசனம் செய்து, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி, பாதுகாத்துள்ளனர்.

தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதி மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானதை கருத்தில் கொள்ளாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து உச்சநீதி மன்றம் நாளை அளவைக் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்ற திசைவழியில் தீர்ப்பு அமைத்திருப்பது தமிழ்நாட்டின் அமைதி நிலை மீது நடத்தும் நேரடித் தாக்குலாகும்.

மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம்

மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து வாழ்ந்து சுமூக நிலையை சீர்கெடுக்கும் முறையில் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்காவிற்கு சொந்தமான இடம், முருகன் கோவிலுக்கான இடம் என எல்லை பிரித்து பேசுவது, மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு துணை போகும் வாதமாகும். இது எந்த வகையிலும் ஏற்கதக்கதல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

வழிவழியாக உள்ள அமைதியை பராமரித்து வந்த கோவில் அரங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரை அறங்காவலராக நியமித்துள்ளதும், கோவில் மற்றும் தர்கா இரண்டுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மலை முழுவதுமான பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருப்பது கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்க்கும் கருத்தாகும்.

தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

அது, தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டத்தின் மதச்சார்பின்மை அடிப்படைகளை தகர்க்கும் வகையிலும், சமூக அமைதியை சீர்குலைத்து வரும் சட்டவிரோத சக்திகளுக்கு ஊக்கமூட்டும் வகையிலும் வழங்கியுள்ள தீர்ப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறது.

உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான அறிவியலுக்கு புறம்பான, சட்ட நடைமுறைகளுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X