

மதுரை,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலைமேல் ஏறிச்சென்று மலை உச்சியில் உள்ள தீபத் தூணை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அவர் மலை தீபத்தூ ணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டார். ஆனால் கடந்த ஆண்டு இந்த உத்தரவு நிறை வேற்றப்படவில்லை. இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மதுரை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சும் உறுதி செய்தது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கார்த்திகை தினத்தன்று (அதாவது நாளை) கடும் நிபந்தனைகளுடன் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்புக்கு இந்து அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன. அதே நேரம் பல்வேறு அரசியல் கட்சிகள் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரின. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் வி.சி.க. தலைவர் திருமாவளவன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்த அமைதி பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதைபோல மதுரை கிரைம் பிராஞ்ச் சந்திப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடுகளின் அடிப்படையில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தடையை மீறி பேரணி, போராட்டம் நடத்தினால் கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளது. மேற்கண்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.