

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த திருவிழாவின்போது சன்னதிதெருவில் 16 கால் மண்டபம் வளாகத்தில் 15 நாட்களும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல் லூரி மாணவ, மாணவிகளின் ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்திட உபயதாரர்கள் முன்வந்தனர். வழக்கம் போல உபயதாரர்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளுக்காக சிறப்பு அழைப்பிதழ் தயார்படுத்தும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிக்கு உட்பட்டு பங்குனி திருவிழாக்கான கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பக்தி சொற்பொழிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம் வருகிற 23-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை 15 நாட் களும் வழக்கம்போல பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.