திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் தாக்குதலா?


திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் தாக்குதலா?
x
தினத்தந்தி 6 July 2025 3:55 PM IST (Updated: 6 July 2025 4:05 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்

மதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த இளைஞர் அஜித்குமார் (வயது 27). இவர் மீது பெண் நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நகை திருட்டு புகார் தொடர்பாக அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமாரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின்போது அஜித்குமாரை போன்றே நவீன்குமாரையும் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நவீன்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தாக்கியதில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட வலியால் சிகிச்சைக்காக நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story