திருத்தணியில் அம்மன் கோவில் சூலம், குத்துவிளக்கு, உண்டியல் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருத்தணியில் அம்மன் கோவிலில் சூலம், குத்துவிளக்கு மற்றும் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருத்தணியில் அம்மன் கோவில் சூலம், குத்துவிளக்கு, உண்டியல் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி உட்பட்ட சுப்பிரமணிய நகர் பகுதியில் துர்கா கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து அம்மனின் சூலம், குத்துவிளக்கு மற்றும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த ரூ.10 ஆயிரம் அடங்கிய உண்டியலையும் கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கோவில் பூசாரி கோவிலை திறக்கவந்த போது பூட்டு உடைத்து கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே கோவிலில் கொள்ளை சம்பவம் நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் கொள்ளை நடந்திருப்பது திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com