

திருத்தணி,
திருத்தணி முருகன் கோவில், முருகப்பெருமானின் 5-ம் படைத்தளமாக விளங்குகிறது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து, உண்டியலில் பணம், நகை உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற மாசி பிரம்மோற்சவ திருவிழாவில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பக்தர் கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
அறநிலையத்துறை கமிஷனர் அனுமதியுடன், மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் இணை கமிஷனர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ் பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
28 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடி 34 லட்சத்து 7 ஆயிரத்து 459 மற்றும் திருப்பணி உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 760 கிடைத்துள்ளது. மொத்தமாக ரூ.1 கோடி 35 லட்சத்து 97 ஆயிரத்து 219 வசூலாகியுள்ளது. மேலும், 468 கிராம் தங்கமும், 13 கிலோ 890 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.