திருத்துறைப்பூண்டி: கனமழையில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு


திருத்துறைப்பூண்டி: கனமழையில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
x

திருத்துறைப்பூண்டி அருகே பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 7.6 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. மேலும் மன்னார்குடியில் 6.5 செ.மீ, குடவாசலில் 4.7 செ.மீ, நீடாமங்கலத்தில் 4.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மடப்புரம் ஆட்டூர் சாலையில் கூரை வீட்டில் வசித்து வந்தவர் கட்டிட தொழிலாளி ஆனந்தராஜ். இவரது வீட்டின் சுவர் கனமழையில் இடிந்து விழுந்தது. இதில் உடல் நசுங்கி ஆனந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story