திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல் போராட்டம் ;போக்குவரத்து பாதிப்பு...!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் வாசலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல் போராட்டம் ;போக்குவரத்து பாதிப்பு...!
Published on

திருத்துறைப்பூண்டி,

சமீபத்தில் பெய்த கன மழையால் தமிழகம் முழுவதும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் கடும் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் கடும் சேதம் ஏற்பட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து. விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்தன.

அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் வயலிலேயே முளைத்தன. மேலும் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் குருவை நெல் கதிர் முழுமையாக அழிந்து போனதால் ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும். மழை பாதிப்பால் வேலைவாய்ப்பு இழந்துள்ளதாக தொழிலாளர் குடும்பங்களுக்கு 5000 நிவாரணம் வழங்க வேண்டும். என்று பயிர்கள் கோடைகால பல்வகை சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரசாயன உரங்கள் விற்பனை செய்திட வேண்டும்.

ஆடு,மாடுகள், உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்பு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கோமாரி நோய் தடுப்பூசி தடுப்பூசி போடும் முகாமை உடன் நடத்த வேண்டும். மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து உயிரிலிருந்து குடும்பத்துக்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும்.

மேலும் பயிர்கள் அழித்து விட்டதால் பயிர் காப்பீடு திட்டத்தில் முழுமையாக பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், தலைமையில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பாலு, ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர தலைவர் பக்கிரிசாமி, நகர செயலாளர் டி. பிசுந்தர், ஆகியோர் முன்னிலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையங்களில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி. வி. சந்திரராமன், திருத்துறை பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆ. பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் முருகேசன், உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். இதில் ஏராளமான விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

திருத்துறைப்பூண்டியில் மையப்பகுதியில் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இதனால் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் வாகனங்கள் திருத்துறைப்பூண்டி இருந்து மன்னார்குடி செல்லும் வாகனங்கள் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் வேதாரண்யம் முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தடைப்பட்டன.

ஆனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com