தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்; ஜனவரி 3ல் ஆருத்ரா தரிசனம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்; ஜனவரி 3ல் ஆருத்ரா தரிசனம்
Published on

தூத்துக்குடியில் உள்ள சிவன் கோவிலான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு திருவெம்பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா நேற்று தொடங்கியது. இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

திருவாதிரை விழாவையொட்டி நேற்று நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடன தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com