திருவள்ளூர்: தெருநாய் கடித்து 18 பேர் காயம்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 18 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்: தெருநாய் கடித்து 18 பேர் காயம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் தெருநாய் கடித்ததில் நகராட்சி பெண் தூய்மை பணியாளர் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 3 பெண்கள் உட்பட 18 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 2லட்சம் பேரை தெரு நாய்கள் கடித்துள்ளது என ஆய்வுகள் கூறுகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com