காந்தியடிகளின் படத்திற்கு கலெக்டர் மரியாதை

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தியடிகளின் படத்திற்கு கலெக்டர் மரியாதை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதை முன்னிட்டு கிராம தொழில் வாரியம் (காதி கிராப்ட்) சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு விற்பனை அரங்கில் காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com