திருவள்ளூர்: நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்: நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
Published on

பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இந்த கல்லூரியில் மேல் தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி(19), என்ற மாணவி இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார். இன்று காலை வகுப்பிற்கு சென்று விட்டு மதிய உணவிற்கு தோழிகளுடன் வந்தவர்.

தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு அறைக்குள் இருந்தார். மாலையில் நீண்ட நேரம் ஆகியும் சுமதி வெளியே வராதால் சந்தேகம் அடைந்த அவரது தோழிகள் மேலே சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது.

கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்த போது சுமதி தூக்கு போட்டு தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சக மாணவிகள் உள்ளே சென்று சுமதியை மீட்டனர். ஆனால் அவர் அங்கேயே இறந்து போனார்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன சுமதி உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சுமதியின் பெற்றோரிடமும், விடுதியில் உள்ள சக மாணவிகளிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நர்சிங் மாணவி சுமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பூந்தமல்லி தாசில்தார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com