திருவள்ளூர்: கோவில் பூட்டை உடைத்து தாலி, உண்டியல் பணம் திருட்டு!

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்: கோவில் பூட்டை உடைத்து தாலி, உண்டியல் பணம் திருட்டு!
Published on

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை கிராமத்தில் ரெயில் நிலையம் அருகே நாகாலம்மன் கோவில் உள்ளது.

தாலி, பணம் திருட்டு!

இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 3 கிராம் எடை கொண்ட தாலியை திருடினர். மேலும், கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.5 ஆயிரத்தையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் வலைவீச்சு

நேற்று காலை கோவிலுக்கு வந்த பொதுமக்கள், கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி கோபிநாத், திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com