திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் கட்சியில் இருந்து விலகல்

அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளராக இருந்தவர் கமாண்டோ அ.பாஸ்கரன். திருவள்ளூர் நகர்மன்ற முன்னாள் தலைவரான இவர், நேற்று தான் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், மாவட்ட துணை செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.வில் 39 ஆண்டுகளாக பயணித்துவரும் நான், கட்சியின் கொள்கைக்கும் கோட்பாடுக்கும் கட்டுப்பட்டு உண்மையாக கட்சிப்பணியாற்றி வந்தேன். ஆனால் என்போன்ற தொண்டர்களை தலைமை தொடர்ந்து புறக்கணித்து வருவது குறித்து பொதுச்செயலாளரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கட்சி வீழ்ச்சி பாதைக்கு செல்வது குறித்து கவலைப்படாமல் இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. எனவே எனது அடிப்படை உறுப்பினர், மாவட்ட துணை செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவேதனையுடன் விலகுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






