

சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
துயர சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் உடல் நலத்துடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் அப்பகுதி மக்கள் மேலும் பாதிக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.