திருவள்ளூர்: வேலைக்குச் செல்ல பெற்றோர்கள் கூறியதால் இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை...!

திருவள்ளூர் அருகே பெற்றோர்கள் வேலைக்கு செல்லும்படி கூறியதால் இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்: வேலைக்குச் செல்ல பெற்றோர்கள் கூறியதால் இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை...!
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் வசித்து வருபவர் இஸ்ரேல் (வயது 45 ). இவர் பள்ளிப்பட்டு அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சுனிதா (38 ). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்று வருகிறார். இவர்களுக்கு ஐஸ்வர்யா(22), சௌந்தர்யா (18 ) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

இவர்களில் ஐஸ்வர்யா டிகிரி படித்து சென்னையில் தாயுடன் தங்கி உள்ளார். சௌந்தர்யா டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார். இந்த நிலையில் சௌந்தர்யாவை வேலைக்கு செல்லுபடி பெற்றோர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த சௌந்தர்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அறைக்கு சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது தந்தை இஸ்ரேல் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சௌந்தர்யா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து அவர் பள்ளிப்பட்டு போலீசாருக்கு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சௌந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com