திருவண்ணாமலை ஒன்றியக்குழு கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை ஒன்றியக்குழு கூட்டம்
Published on

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் கலைவாணிகலைமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் த.ரமணன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் மெ.பிரித்திவிராஜன் வரவேற்றார்.

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள், பணிமேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகியவற்றை செயல்படுத்திய தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 54 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக சமையல் கூடங்களை புதுப்பித்தல் மற்றும் தேவைப்படும் பள்ளிகளுக்கு புதிய நவீன சமையல் அறைகள் கட்டுதல் ஆகிய பணிகளை ரூ.36 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை ஒன்றியத்தில் ஊராட்சிகளில் உயர்மின்கோபுரங்கள் அமைத்தல், சாலைகள் சீரமைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளுதல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து ஒன்றிய பொது நிதியில் இருந்து பணிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com