திருவாரூர்: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; முதியவருக்கு 40 ஆண்டுகள் சிறை

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஒரு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; முதியவருக்கு 40 ஆண்டுகள் சிறை.
Published on: 

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த ஒரு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 66). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந்தேதி ஒரு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

முதியவருக்கு 40 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பாக நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர். இந்த வழக்கில் திருவாரூர் மகிளா விரைவு கோர்ட்டு நீதிபதி சரத்ராஜ், குற்றவாளி ராமசாமிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

X