திருவாரூர்: ஆம்னி பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்

விபத்தில் சிக்கி காயமடைந்த நபர்களை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
திருவாரூர்:  ஆம்னி பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்
Published on

சென்னை

சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடி என்ற பகுதியில் வந்தபோது, திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த பயணிகளில் 8 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விபத்தில் சிக்கி காயமடைந்த நபர்களை மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com