திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்த பெண்கள்

திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் கோலம் வரைந்தனர்.
திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்த பெண்கள்
Published on

திருவாரூர்,

குடியுரிமை திருத்த சட்டம் கொண்ட வரப்பட்டதும் அதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. பல இடங்களில் வன்முறையும் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. வன்முறை சம்பவங்களில் பலர் பலியாகினர். காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, சென்னை பெசன்ட் நகர் பகுதியில் பெண்கள் சிலர் கடந்த ஞாயிற்று கிழமை காலை கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பேலீசார் அனுமதி மறுத்தனர். எனினும், சிலர் போலீசாரின் அறிவுரையை மீறி செயல்பட்டனர்.

இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பேலீசார் அவர்களை விடுவித்தனர். ஆனால் அவர்களில் 6 பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோலம் வரைந்து போராடியதற்காக பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டார்.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டு வாசலில் நேற்று காலை, வேண்டாம் CAA, NRC என கோலம் வரையப்பட்டது. இதேபோன்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோரது வீட்டு வாசலிலும் கோலம் வரையப்பட்டது.

இதன்பின்பு தி.மு.க. மகளிரணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோலங்கள் வரையப்பட்டன. இந்நிலையில், இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்துள்ளது. திருவாரூரில் நெய்விளக்கு தோப்பு பகுதியில் 21வது வார்டில்

50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com