திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை
Published on

ராசிபுரம்

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எப்பொழுதும் கம்பம் நடப்பட்டு இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் 14-ம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. கல்வி அபிவிருத்தி, திருமண பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, தொழிலில் நல்ல மேன்மை, நவகிரக தோஷங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது உள்பட பல்வேறு பலன்கள் கிடைப்பதற்காக நடத்தப்பட்டது.

நேற்று காலையில் லட்சுமி, கணபதி ஹோமம் நடந்தது. விநாயகர், பாலமுருகன், மாரியம்மன் நித்திய சுமங்கலி கம்பம் ஆகியவற்றுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் திருவிளக்கு பூஜை வைத்து அம்மனை வழிபட்டனர். நித்திய சுமங்கலி மாரியம்மன் ராஜ மாதங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com