திருவிளக்கு பூஜை

சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி நாடாச்சி கன்னி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
திருவிளக்கு பூஜை
Published on

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி நாடாச்சி கன்னி கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு 207 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுற்று வட்டார பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. பூஜையை இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பூஜையை காமராஜ் நகர் இந்து அன்னையர் முன்னணியர் பொறுப்பாளர் ராதா, மேலநடுவக்குறிச்சி இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் ராதாசெல்வி ஆகியோர் வழிநடத்தினர். தொடர்ந்து பூஜையில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com