திருவொற்றியூர்: தண்டவாளத்தில் கற்களை வைத்த சிறுவன் கைது
கோப்புப்படம்இந்த விவகாரத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை,
திருவொற்றியூரில் தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்படிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது யார் என விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் தண்டவாளத்தில் கற்களை வைத்துள்ளது தெரியவந்துள்ளது . பின்னர் இந்த விவகாரத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விளையாட்டாக தண்டவாளத்தில் கற்களை வைத்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார். பின்னர் சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய மாஜிஸ்ட்ரேட் பெற்றோரிடம் ஒப்படைத்தது. மேலும் குழந்தைகளை கவனிக்க வேண்டும் எனவும் பெற்றோரிடம் அறிவுரை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story






