இது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் - நயினார் நாகேந்திரன்

உதயநிதியை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே ஆட்சி நடத்துகிறது திமுக என நயினார் நாகேந்திரன் கூறினார்.
இது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் - நயினார் நாகேந்திரன்
Published on

மதுரை,

மதுரையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது;-

புத்தகங்களை தூக்க வேண்டிய மாணவர்கள் கையில் கஞ்சா இருப்பதற்கு திமுகவின் மோசமான ஆட்சி தான் காரணம். உதயநிதி ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே ஆட்சி நடத்துகிறது திமுக. சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை யாருக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல்.

இதில் தர்மம் வெல்ல வேண்டும். பார்த தாயின் தவப்புதல்வர், பாரத தேசம் கண்டெடுத்த நல் முத்து நரேந்திர மோடிவை வரவேற்கிறேன். கண்ணகி நீதி கேட்ட இம்மண்ணில் மக்கல் நலனுக்காக நீதி கேட்டு வந்துள்ள பிரதமருக்கு வணக்கம். தேஜ கூட்டணியின் மதுராந்தக கூட்டம் மாநாடுபோல இருந்தது. வன்முறை நடக்கும் ஆட்சி, சனாதனத்தை அழிப்போம் என சொன்ன மோசமான ஆட்சி இது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com