"இதுவே கடைசி".. "இனிமேல் பதில் அளிக்க விரும்பவில்லை" அறநிலையத்துறைக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் பதில் கடிதம்

அறநிலையத்துறையின் கடிதத்திற்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.
"இதுவே கடைசி".. "இனிமேல் பதில் அளிக்க விரும்பவில்லை" அறநிலையத்துறைக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் பதில் கடிதம்
Published on

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோவில் சம்மந்தமான விபரங்களை, வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கோவில் தீட்சிதர்கள் செயலாளருக்கு, இந்து அறநிலையத் துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், அறநிலையத்துறையின் கடிதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

2000 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணின் மைந்தர்களாக விளங்கும் பண்டைய கால முன் சமூகத்தை சேர்ந்தவர்கள் பொது தீட்சிதர்கள். இச்சமூகத்தின் அடிப்படை சமய நிர்வாக மற்றும் கலாச்சார உறுதிகளை பாதுகாக்குமாறு அரசாங்கத்திடமும் அதன் அதிகாரிகளிடமும் கோரிக்கை வைக்கின்றோம்.

சபாநாயகர் கோவில் நிர்வாகத்தில் சட்டத்திற்கு புறம்பாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தாலோ அல்லது ஏதேனும் உத்தரவு பிறப்பித்தாளோ அது எங்களை கட்டுப்படுத்தாது. அது நீதிமன்ற அவமதிப்பிற்கு சமமாகும்.

எங்கள் வழக்கறிஞர்களின் சட்ட ஆலோசனை படிவங்களை பெற்ற பிறகு உங்களுக்கு எதிராக நீதி மன்ற அவமதிப்பிற்கு வழக்கு தொடர்வோம். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. இந்த கடிதத்திற்கு பிறகு எந்தவித பதில் கடிதமோ அல்லது எந்த வித தொடர்போ அறநிலைத்துறையுடன் எங்களுக்கு இருக்காது.

இவ்வாறு அந்த கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com