"ஸ்டாலினோடு கைகோர்த்து நிக்க காரணம் இதுதான்" - திருமாவளவன் எம்.பி. ஓபன் டாக்..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோடு கைகோர்த்து நிற்பது குறித்து திருமாவளவன் எம்.பி. பேசியுள்ளார்.
"ஸ்டாலினோடு கைகோர்த்து நிக்க காரணம் இதுதான்" - திருமாவளவன் எம்.பி. ஓபன் டாக்..!
Published on

சென்னை,

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் எம்.பி பேசியதாவது:-

தளபதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட இயக்கத்திற்கு நான்காம் தலைமுறைக்கு தலைமை தாங்குகிறார். பெரியாருக்கு பின்னர் அண்ணா, அண்ணாவிற்கு கலைஞர் கருணாநிதி, கருணாநிதிக்கு பிறகு தளபதி மு.க.ஸ்டாலின்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாத்து வருகிற ஒரு மகத்தான பணியை ஏற்றுக்கொண்டு பெரியார் வழியில் அண்ணா கட்டிக் காப்பாற்றிய சமூக நீதி அரசியலை தலைவர் கலைஞர் அவர்கள் ஓங்கி பாதுகாத்த சமூக நீதி அரசியலை இன்றைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கிறார்.

எம்மை போன்றவர்கள் எல்லோரும் இன்றைக்கு தளபதி மு.க.ஸ்டாலினோடு கைகோர்த்து நிற்பதற்கு ஒரே காரணம் தான். தேர்தலுகாக அல்ல சமூக நீதிக்காக தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com