"இதனால் தான் மாணவர்களின் சீருடையில் விருதை பெற்றேன்" நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர்

மாணவர்களின் சீருடையில் விருதை பெற்றதற்கான காரணம் குறித்து நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
"இதனால் தான் மாணவர்களின் சீருடையில் விருதை பெற்றேன்" நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர்
Published on

புதுடெல்லி,

ஆசிரியன் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் விருதுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அவர் அரசு பள்ளி சீருடையிலேயே டெல்லி சென்று விருதினை வாங்கினார். விருதை வாங்கிய பிறகு தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது,

"தானே கற்றல் என்ற திட்டத்தை சொந்த செலவில் செயல்படுத்தி வருகிறேன். இந்த திட்டம் மாணவர்களின் கற்றல் நிலையை உயர்த்தியுள்ளது,. தனக்கு பரிசுத்தொகையை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும், போதை விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்துவேன்.

மாணவர்களின் சீருடையை அணிவதற்கான காரணம் குறித்து கேட்டதற்கு அவர் கூறும்போது, அரசு பள்ளி வறுமையின் அடையாளமல்ல.. பெருமையின் அடையாளம்" அரசு பள்ளி சாதனையாளர்களின் கூடம் என்பதை மக்களுக்கும் மாணவர்களுக்கும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே எனது பணிக்காலம் முழுவதும் மாணவர்களின் சீருடையை அணிகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com