'புதிய கல்விக் கொள்கையை இதற்காகத்தான் எதிர்க்கிறோம்..' - திருமாவளவன் பேட்டி

12-ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் வி.சி.க.வின் கருத்து என திருமாவளவன் தெரிவித்தார்.
'புதிய கல்விக் கொள்கையை இதற்காகத்தான் எதிர்க்கிறோம்..' - திருமாவளவன் பேட்டி
Published on

சென்னை,

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிமேல் கட்டாய தேர்ச்சி கிடையாது என்ற நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுக்கு தற்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது புதிய கல்விக் கொள்கையால் ஏற்பட்ட நெருக்கடி. இதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என தமிழகத்தில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறோம்.

ஜனநாயக சக்திகள் இதனை புரிந்து கொண்டு தேசிய அளவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 12-ம் வகுப்பில் மட்டுமே பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்து.

ஆனால் வரிசையாக 5, 8, 10, 11, 12-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு வைத்து மாணவர்களை வடிகட்டும் முயற்சியை பா.ஜ.க. அரசு மேற்கொள்கிறது. நாங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மூலம் புரிந்து கொள்ள முடியும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com