இந்த ஆண்டு ரூ.44 லட்சத்துக்கு தீபாவளி விற்பனை இலக்கு

ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு ரூ.44 லட்சத்துக்கு தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டு ரூ.44 லட்சத்துக்கு தீபாவளி விற்பனை இலக்கு
Published on

ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு ரூ.44 லட்சத்துக்கு தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் தகவல் தெரிவித்து உள்ளார்.

கோ-ஆப்டெக்ஸ்

ராமநாதபுரத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகைக்கான 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதம் பலவித வடிவமைப்புகளில் மென்பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக வரவழைக்கப்பட்டுள்ளது.

தற்போது உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருப்புவனம் பட்டு சேலைகள் மற்றும் கோவை மென்பட்டு சேலைகள், விற்பனைக்கு தயாராக உள்ளது.

ரூ.44 லட்சத்துக்கு விற்பனை இலக்கு

ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு ரூ.27.06 லட்சம் தீபாவளி விற்பனை செய்துள்ளனர். இந்த ஆண்டு ரூ.44 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசு துறையினர், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யான், சங்கீதா, சங்கர், மேலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாண்டியம்மாள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com