தூத்துக்குடி அமலி நகரில் தூண்டில் வளைவுகள்- அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

தூண்டில் வளைவுகள், படகு அணையும் தளம் மற்றும் அணுகு சாலைகள் அமைப்பது தொடர்பாக சட்டசபையில் 13.04.2022 அன்று அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிவிப்பினை வெளியிட்டார்.
தூத்துக்குடி அமலி நகரில் தூண்டில் வளைவுகள்- அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
Published on

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13.04.2022 அன்று நடைபெற்ற 2022-2023-ஆம் நிதி ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, தூத்துக்குடி மாவட்டம், அமலி நகர் மீன் இறங்குதளத்தில் கடல் அரிப்பினை தடுத்து படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட ஏதுவாக தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் என்றும், கன்னியாகுமரி மாவட்டம், கீழக்கடியப்பட்டணம் கிராமத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாத்திடவும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், தூண்டில் வளைவுகள், படகு அணையும் தளம் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கப்படும் என்றும் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிவிப்பினை வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், அமலிநகர் மீன் இறங்குதளத்தில் கடல் அரிப்பினை தடுத்து படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட ஏதுவாக தூண்டில் வளைவுகள் அமைக்கவும், கன்னியாகுமரி மாவட்டம், கீழக்கடியப்பட்டணம் கிராமத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாத்திடவும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், தூண்டில் வளைவுகள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கவும், மொத்தம் ரூ.93.00 கோடி நபார்டு திட்டத்தின்கீழ் நிருவாக ஒப்புதல் அளித்து அரசு 27.10.2023 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com