

தூத்துக்குடி,
தூத்துக்குடி புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்- சென்னம்பட்டி ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அமீர்தராஜ் (வயது 42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 90 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைச்சாமி மற்றும் போலீசார் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர், காடல்குடி ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை ஈடுபட்டிருந்த விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன்(25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 95 பாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேற்சொன்ன நபர்களிடமிருந்து மொத்தம் 190 மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.