தூத்துக்குடி: போக்சோ வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


தூத்துக்குடி: போக்சோ வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

தூத்துக்குடி மாவட்டத்தில் இருவேறு போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி, அன்னை தெரசா மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்த சேவியர் மகன் செல்வன் (வயது 39) மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி, மடத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (வயது 25) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் (28.03.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story