தூத்துக்குடி: அரிவாள், கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 97 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: அரிவாள், கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதியில் கடந்த 6.8.2025 அன்று ஒருவரை அரிவாளை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி, குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஹரிசிங் (வயது 25) மற்றும் கடந்த 11.8.2025 அன்று ஓட்டப்பிடாரம் பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவபெருமாள் மகன் தங்ககுமார்(23) ஆகிய 2 பேரை, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று (7.9.2025) புதுக்கோட்டை மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 97 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com