தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கயத்தாறு பகுதியில் இளைஞரை முன்விரோதம் காரணமாக கம்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த வாலிபர்கள் காரால் மோதியும், அரிவாளால் தாக்கியும் கொலை செய்தனர்.
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை காரால் மோதியும், அரிவாளால் தாக்கியும் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான கயத்தாறு கப்புலிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான கணேசமூர்த்தி மகன் சண்முகராஜ் (வயது 30), வெள்ளபாண்டி மகன் மகாராஜன் (34) ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் (27.04.2025) கயத்தாறு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com