தூத்துக்குடி: மதுபோதையில் நடந்த தகராறில் 2 பேர் காயம்- 2 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி முருகேசன்நகர் டாஸ்மாக் பாரில் இரவு நேரத்தில் சுமார் 10 பேர் மது அருந்தி கொண்டிருந்தபோது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: மதுபோதையில் நடந்த தகராறில் 2 பேர் காயம்- 2 வழக்குகள் பதிவு
Published on

திருச்சி மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தெழிலாளர்கள் சிலர் தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் தங்கியிருந்து மாநகராட்சி பாதாள சாக்கடை கட்டுமான பணி செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சுமார் 10 நபர்கள் முருகேசன்நகர் டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் இரு தரப்பினரும் மாறி, மாறி பீர் பாட்டில் மற்றும் கம்பியால் தாக்கியதால் இருதரப்பிலும் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய பேலீசார் 2 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com