தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 2 வாலிபர்கள் தங்கச் செயினை வழிப்பறி செய்தனர்.
தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
Published on

கடந்த 22.2.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர்ஹனிபா(எ) ராஜா மகன் பின்லேடன் (வயது 22) மற்றும் மணப்பாடு, மீனவர்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரியயோஸ்வின்(எ) யோசுவா(22) ஆகிய 2 பேரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராஜ்குமார் இன்று (27.5.2025) பின்லேடன் மற்றும் மரியஜோஸ்வின் (எ) யோசுவா ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு செல்வராஜ் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com