தூத்துக்குடி: 2 டன் பீடி இலை, 240 கிலோ சிகரெட் பண்டல்கள், சரக்கு வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் தருவைக்குளம் சமத்துவபுரம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தூத்துக்குடி: 2 டன் பீடி இலை, 240 கிலோ சிகரெட் பண்டல்கள், சரக்கு வாகனம் பறிமுதல்
Published on

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு தருவைக்குளம் சமத்துவபுரம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் போலீசாரை கண்டதும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிள்ளார்.

உடனடியாக தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக சுமார் 2 ஆயிரம் கிலோ (2 டன்) எடையுள்ள பீடி இலை பண்டல்கள் மற்றும் 240 கிலோ எடையுள்ள சிகரெட் பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன கடத்தி வரப்பட்ட பீடி இலை பண்டல்கள், சிகரெட் பண்டல்கள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை தருவைகுளம் காவல் நிலைய போலீசார் நேற்று சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com