தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி


தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி
x

நண்பர்கள் 3 பேர் ஒரே பைக்கில், சிலுவைபுரம் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகே உள்ள வடக்குசெவல் கிராமம் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த வீரா மகன் பெத்துராஜ் (வயது 23), காலனி தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகன் ரமேஷ்(18), மேலத் தெருவைச் சேர்ந்த வேல்வாசகம் மகன் மாரிலிங்கம்(19) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இரவு 3 பேரும் ஒரே பைக்கில் வேம்பாரில் உள்ள கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடந்த முளைப்பாரி ஊர்வலத்தை பார்ப்பதற்காக வடக்குசெவல் கிராமத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். சிலுவைபுரம் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

இதில் பெத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற 2 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வரும் வழியில் ரமேஷ் பரிதாபமாக இறந்தார். மாரி செல்வம் பலத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரவீனா வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம், கிளாக்குளம் வீரவநல்லூர், சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்த காத்தப்பன் மகன் மாரியப்பன்(49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பைக் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story