தூத்துக்குடி: வீட்டின் பூட்டுகளை உடைத்து 21 சவரன் நகைகள் கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் உள்ள கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.
தூத்துக்குடி: வீட்டின் பூட்டுகளை உடைத்து 21 சவரன் நகைகள் கொள்ளை
Published on

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி, சோமநந்தபுரம் தெருவைச் சேர்ந்த சுயம்பு மகன் கணேஷ் (வயது 39), உடன்குடி மெயின் பஜாரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று ஊர் திரும்பியுள்ளார். அப்பேது அவரது வீட்டில் உள்ள கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகைகள் திருடுபேயிருந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உடன்குடி காவல் நிலையத்தில் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கெள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பேலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com