தூத்துக்குடி: புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது- சரக்கு வாகனம், பைக் பறிமுதல்


தூத்துக்குடி: புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது- சரக்கு வாகனம், பைக் பறிமுதல்
x

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் நாகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் நாகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி ஒரு சரக்கு வாகனத்திற்கு முன்பு ஒரு இருசக்கர வாகனமும் பின்பு ஒரு இருசக்கர வாகனமும் வந்தது அறிந்த சங்கரலிங்கபுரம் போலீசார் சந்தேகம் அடைந்து வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது அந்த வாகனத்தில் வந்த 3 நபர்கள் காவல்துறையினரிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறு செய்துள்ளனர்.

இதனையடுத்து அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 130 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட என்.வேடபட்டி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் கார்த்திக்குமார் (வயது 33), தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேஷ்(25), ஆற்றங்கரை தானியேல்நகர் பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் அன்புதாசன்(25) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது மாசார்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், வெங்கடேஷ் மீது விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story