தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

கடந்த 30.8.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் திருநெல்வேலி, சொக்கத்தான்தோப்பு பகுதியைச் சேர்ந்த குமார் மகன் ஆறுமுகம்(எ) அலெக்ஸ் (வயது 25) என்பவரையும், கடந்த 30.8.2025 அன்று ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கரசுப்பு மகன் ஆண்டிகுமார்(24) என்பவரையும், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துவேல் மகன் சரவணன்(26) என்பவரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேற்சொன்ன காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று (27.9.2025) ஒரே நாளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com