தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 95 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் கடந்த 7.8.2025 அன்று 10 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான கோவில்பட்டி, ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்த ராமையா மகன் சங்கிலிபாண்டி (வயது 39), பாரதி நகரை சேர்ந்த நடராஜன் மகன் நாகராஜ்(24) மற்றும் கருணாநிதி நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் மகாராஜா(30) ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று (3.9.2025) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 95 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com