தூத்துக்குடி: 36 கிலோ புகையிலை பொருட்கள், கார், பணம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி பகுதியில் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி: 36 கிலோ புகையிலை பொருட்கள், கார், பணம் பறிமுதல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் நேற்று நெடுங்குளம் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் சந்தேகப்படும்படி கார் அருகில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அதில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருத்தவேல் (வயது 33) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்சொன்ன போலீசார் கருத்தவேலை கைது செய்து அவரிடமிருந்த 36 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரொக்கப் பணம் ரூ.41 ஆயிரத்து 800 மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com