

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இரு தரப்பினர் இடையே நடந்த கோஷ்டி மோதலில் நண்பர்களுக்கு அரிவாள் வெட்டு தொடர்பான வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி டூவிபுரத்தில் பைக்கில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டது தொடர்பான முன்விரோதத்தில் லட்சுமணன் (வயது 34), இசக்கிமாரி(18) தரப்பினருக்கும், அஸ்வந்த்ராஜ்(25) தரப்பினருக்கும் இடையே அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் லட்சுமணன் மற்றும் இசக்கிமாரி அரிவாளால் வெட்டப்பட்டனர்.