தூத்துக்குடி: சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து- வாலிபர் பலி


தூத்துக்குடி: சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து- வாலிபர் பலி
x

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார்.

தூத்துக்குடி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ள மீனம்பட்டியைச் சேர்ந்த தாஸ் மகன் அஜய்தேவ் (வயது 18). இவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார். பின்னர் இன்று அதிகாலை தனது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

கோவில்பட்டி, துறையூர் ஈராச்சி விலக்கு ரோட்டில் சென்றபோது, திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story